திருமண விழா

போடியில் அமெரிக்கன் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் இல்ல திருமண விழா நடந்தது.

Update: 2022-05-15 18:17 GMT
போடி : 

போடி காமராஜர் பஜாரில் உள்ள அமெரிக்கன் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர்கள் முகமது ரசூல், வகிதா பானு. இவர்களது 2-வது மகள் ஆப்ரிதா சிக்னாசுக்கும், கம்பம் ராவியத்து பஸரியா மகன் ஹாரீஸ் என்ற சதாம் உசேனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் போடி வான்மதி மகாலில் நடைபெற்றது. விழாவுக்கு தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். சென்னை வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.எம்.எச். அசன் ஆரூண் தலைமையில் திருமணம் நடைபெற்றது. 

விழாவில் பெரியகுளம் தி.மு.க. பிரமுகர் எல்.மூக்கையா, போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், நகர காங்கிரஸ் தலைவர் முசாக் மந்திரி, மகிளா காங்கிரஸ் தலைவி கிருஷ்ணவேணி, ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி செயலாளர் புருஷோத்தமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்