வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமையால் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2022-05-15 17:51 GMT
காரைக்குடி, 
காரைக்குடி செக்காலை பகுதியை சேர்ந்தவர் அஜிதா (வயது 26).இவருக்கும் கோட்டையூரை சேர்ந்த செந்தில்குமார் (26) என்பவருக்கும் இரு குடும்பத்து பெரியோர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. செந்தில்குமார் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்தின்போது பெண் மற்றும் மாப்பிள்ளை ஆகியோருக்கு போடவேண்டிய நகைகள் மற்றும் சீர் பொருட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே செந்தில்குமார் குடும்பத்தினரின் தூண்டு தலின் பேரில், திருமணத்தின்போது போட்ட நகைகள் சீர்வரிசைகள் போதாது என்று கூடுதலாக 30 பவுன் நகையும் ரூ.15 லட்சம் பணமும் வாங்கி வரவேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக அஜிதா காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் அஜிதாவின் கணவர் செந்தில்குமார், மாமியார் மல்லிகா மற்றும் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்