ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-05-15 17:42 GMT
காட்பாடி

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை  இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் காட்பாடி முத்தரசி குப்பம் சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சித்தூரை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது. அதை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 120 மூட்டைகளில் 6 டன் கிலோ ரேஷன் அரிசி  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த பெருமாள் (வயது 30), ராணிப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்குமார் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்