அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு நடந்தது.
தோகைமலை,
தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பொம்மாநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்திற்கு பள்ளி தலைமையாசிரியை மேரிலாரா தலைமை தாங்கினார். இதில், திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டு பொம்மாநாயக்கன்பட்டி, மங்காம்பட்டி, தொப்பாநாயக்கம்பட்டி, அழகனாம் பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் நேரடியாக சென்று மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள அதி நவீன கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், நூலகம், புதிய வகுப்பறைகள் உள்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இதில், பள்ளியின் ஆசிரியர்கள் ஜேசுதாஸ், கருணாகரன், சண்முவள்ளி, சுதா, முருகன்புகழ், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.