ஏலகிரிமலையில் சத்ய யோகி குரு ஜெயந்தி விழா
ஏலகிரிமலையில் சத்ய யோகி குரு ஜெயந்தி விழா நடந்தது.
ஜோலார்பேட்டை
ஏலகிரிமலையில் ஸ்ரீசத்ய யோகி குரு ஜெயந்தி விழா நடைபெற்றது. பொன்னேரி கூட்டு ரோட்டில் இருந்து ஏலகிரி மலைக்கு நூற்று கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பால் குடத்துடன், கேரள செண்டை மேளத்துடன் சென்றனர். ஆஸ்ரத்தை அடைந்ததும் 8 விதமான யாகம் நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் இருந்து திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் 12 வகையான அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசத்ய யோகி ஆஸ்ரம பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.