இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
கற்கோவில் ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.
நீடாமங்கலம்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய நிர்வாகக்குழு கூட்டம் கற்கோவில் கிராமத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு வழிகாட்டியாக மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் எம்.பி., மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், மாநிலகுழு உறுப்பினர் கே.உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நீடாமங்கலம் ஒன்றிய மாநாடு அடுத்த மாதம் 12-ந் தேதி பொதக்குடியில் சிறப்பாக நடத்துவது, வருகிற 18-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை அனைத்து கிளைகளிலும் கூட்டம் நடத்துவது, நீடாமங்கலம் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.