ராஜகோபாலசாமி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-05-15 18:30 GMT
மன்னார்குடி:
மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் சொ.ரவி முன்னிலை வகித்தார். இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்  ம.செல்வம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகள் பட்டமளிப்பு விழா நடைபெறாததால் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை படித்து முடித்த 1,024 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

---

மேலும் செய்திகள்