ராஜகோபாலசாமி கோவிலில் உழவாரப்பணி

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது.

Update: 2022-05-15 18:30 GMT
மன்னார்குடி:
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் சங்கரா உழவாரப்பணி குழு சார்பில்  உழவாரப்பணி நடைபெற்றது. இந்த பணியை திருவாரூர் மாவட்ட என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சங்கரா உழவாரப் பணி குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.  அமைப்பாளர் தனுஷ் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் வாசுதேவன், செந்தில் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  தாயார் பிரகாரத்தை அடுத்துள்ள பிரகாரத்தில் ராமர் பாதம் தொடங்கி யாகசாலை பகுதி வரையில் உள்ள இடங்களில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. இதில் ராஜகோபாலசாமி அரசு கலை கல்லூரி பேராசிரியர் சந்திரசேகரன், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் பிரபாகரன் ஆகியோர் ஈடுபட்டனர்.
----

மேலும் செய்திகள்