மின் மோட்டார் திருட்டு

விவசாய நிலத்தில் மின் மோட்டார் திருடு போனது.

Update: 2022-05-15 17:14 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 63). இவரது நிலத்தில் கோகுல் என்பவர் காவலாளியாக உள்ளார். இவர், சம்பவத்தன்று கிணற்றில் இருந்து நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு சென்றார். 

மறுநாள் வந்து பார்த்த போது, கிணற்றில் இருந்த மின்மோட்டாரை காணவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர். 

இதுகுறித்து கோகுல் விநாயகத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர் ரோசனை போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்