ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

போடியில், நகர தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.;

Update: 2022-05-15 17:11 GMT
போடி: 

போடி நகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்  போடி திருவள்ளுவர் சிலை அருகே நடைபெற்றது. இதற்கு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 
 தமிழக அரசு 10 ஆண்டுகள் சாதனைகளை ஓராண்டு சாதனையாக செய்து முடித்துள்ளது. மீதமுள்ளவற்றை நிறைவேற்றி சொன்னதை செய்வோம், பொதுமக்களின் நன்மதிப்பை பெறுவோம் என்றார். கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.மூக்கையா, பெரியகுளம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.எஸ். சரவணகுமார் எம்.எல்.ஏ., போடி ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.லட்சுமணன், போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், முன்னாள் நகர செயலாளர்கள் ராஜா ரமேஷ், முகமது பசீர், நகர தி.மு.க. பிரமுகர் நம்பிக்கை நாகராஜன், கவுன்சிலர்கள், பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் எத்திலாக்கம்மாள் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்