கர்நாடக அரசு பஸ்களில் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணம் கிடையாது-கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்
கர்நாடக அரசு பஸ்களில் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணம் கிடையாது என கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல் தெரிவித்துள்ளது
பெங்களூரு: கர்நாடகத்தில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கர்நாடக அரசு பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரசு பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை, 3 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு சில நேரங்களில் முழு கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை கா்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) மறுத்துள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசு பஸ்களில் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கட்டணம் கிடையாது. 6 வயது முதல் 12 வயது உட்பட்ட சிறுவர், சிறுமிகள் அரசு பஸ்களில் பயணம் செய்யும் போது பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.