மாணவிக்கு பாலியல் தொல்லை; கொத்தனார் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 22). கொத்தனார். இவர், திருமண ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாரீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.