பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
கடலூர்,
கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மனித உரிமைகள் அமைப்பு தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். பொருளியல் துறை தலைவர் ராமகிருஷ்ணன் சாந்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி, ஆசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பின்னர் மாணவ-மாணவிகள் பலருக்கு குரூப்-2 தேர்வுக்கான புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் கல்லூரியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணினி அறிவியல் துறை தலைவர் கீதா நன்றி கூறினார்.