கலவையில் 45.2 மில்லி மீட்டர் மழை

கலவையில் நேற்று 45.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

Update: 2022-05-15 16:42 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தநிலையில் மாலை மழைபெய்யத்தொடங்கியது. தொடர்ந்து இரவு வரை ராணிப்பேட்டை, சிப்காட் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கலவை- 45.2, காவேரிப்பாக்கம்- 24, சோளிங்கர்- 12.6, அரக்கோணம்- 4.5, ஆற்காடு- 2, வாலாஜா- 2, அம்மூர்- 2.
கோடைகாலத்தில், அக்னி நட்சத்திரத்திரத்தின் தாக்கம் அதிகமுள்ள நாட்களில், கோடை மழை பெய்தது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த மழையால் வெப்பச்சலனம் குறைந்து காணப்பட்டது.
,

மேலும் செய்திகள்