மொபட் மோதி தொழிலாளி சாவு
தியாகதுருகம் அருகே மொபட் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே புது பல்லகச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 55), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து தியாகதுருகத்திற்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். கலையநல்லூர் அருகே உள்ள தேவாலயம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மொபட் ஒன்று வைத்திலிங்கம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வைத்திலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வைத்திலிங்கம் மனைவி விஜியா கொடுத்த புகாரின் பேரில் மொபட் ஓட்டி வந்த பழைய பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் (55) மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.