கூடுதல் பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரம்

கூடுதல் பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரம்

Update: 2022-05-15 16:19 GMT
உடுமலை, மே.16-
உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ்நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நூற்றாண்டு விழாவளர்ச்சிப் பணிகள்
உடுமலை நகராட்சி ஆரம்பிக்கப்பட்டு 103 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி உடுமலை நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கு நூற்றாண்டு விழா வளர்ச்சிப்பணிகள் சிறப்பு திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
 அதன்படி தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் (ஓடை) தூர்வாருதல், மத்திய பஸ் நிலையம் அருகே வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ்நிலையம் கட்டுதல், முக்கிய சாலைகளில் புதிய மின் விளக்குகள் அமைத்தல், வாரச்சந்தையை மேம்படுத்துதல், 5 பூங்காக்களை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக மொத்தம் ரூ.48 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பஸ் நிலையம்
இதில் உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு கிழக்குபுறம் 62 ஆயிரத்து 92 சதுர அடி உள்ள காலி இடத்தில் (பழைய வி.பி.புரம்) ரூ.3 கோடியே 75 லட்சத்தில்கூடுதல் பஸ்நிலையம்கட்டப்படுகிறது.
இந்த கூடுதல் பஸ்நிலையத்தில் 15 பஸ்கள் நிறுத்துவதற்கான வசதி இடம்பெறும். இந்த பஸ் நிலையத்தில் 8 கடைகள் இடம் பெறும். 
அத்துடன் பயணிகள் காத்திருக்கும் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, மின்சார அறை, டிரைவர் கண்டக்டர்கள் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, டிக்கெட் பதிவு அறை மற்றும் ஹால் ஆகியவை இடம் பெறும். இதற்கான கட்டிட கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அத்துடன் இந்த கூடுதல் பஸ் நிலைய வளாகத்தில் 4,410 சதுர அடியில் உணவகமும் கட்டப்படுகிறது

மேலும் செய்திகள்