இருளில் மூழ்கிய அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையம்
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையம் 8 மணி நேரம் இருளில் மூழ்கியது.
அரக்கோணம்
அரக்கோணம் ரெயில் நிலையம் முழுவதும் மின் விளக்குகள் எரிந்த நிலையில் இரண்டாவது நடைமேடையில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் மட்டும் சுமார் 8 மணி நேரமாக மின் தடையால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய வழக்கமான பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர். மின் தடை குறித்து ரெயில்வே அலுவலர்களுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மழை நாட்களில் கட்டிடம் முழுவதும் நீர் கசிந்து கம்ப்யூட்டர் மற்றும் வழக்கு சம்மந்தமான கோப்புகள் நனைவதாகவும், போலீஸ் நிலையத்திற்குள் குடை பிடித்து இருக்கின்றோம். ரெயில் நிலையத்திற்கு ஆய்வின் போது வரும் அலுவலர்களிடம் இது குறித்து தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை போலீசார் தெரிவித்தனர்.