அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மூலிகை தோட்டம்

தென்காசி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது.

Update: 2022-05-15 15:23 GMT
தென்காசி:

தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று தென்காசி 13-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமை தாங்கி, முதல் மூலிகைச் செடியை நட்டினார். உறைவிட மருத்துவர் டாக்டர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் தென்காசி 13-வது வார்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வின்சென்ட், கரிசல்குடியிருப்பு பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பாபு வேலன், ஆஸ்பத்திரி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மூலிகை தோட்டம் அமைக்கும் பணியை பசுமை தென்காசி அமைப்பைச் சேர்ந்த முஸ்தபா, பசுமை இலத்தூர் அமைப்பை சேர்ந்த கனகராஜ், உதயகுமார், கவியரசு, சதீஷ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர். 

மேலும் செய்திகள்