வரதராஜபெருமாள், சுந்தரி அம்மன் கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
காட்பாடியில் உள்ள வரதராஜபெருமாள், சுந்தரி அம்மன் கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
காட்பாடி
காட்பாடி குமரப்பநகரில் சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கோவில் நிர்வாகிகளிடம் கட்டிடப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றார். பின்னர் அவர் தாராபடவேட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் கோவில் நிர்வாகிகள், இந்த கோவில் மிகவும் பழமையான கோவில். கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. எனவே திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றனர்.
ஆய்வின்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.