கோடை விடுமுறை எதிரொலியாக கறிக்கோழி கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

கோடை விடுமுறை எதிரொலியாக கறிக்கோழி கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

Update: 2022-05-15 15:19 GMT

பொள்ளாச்சி

கோடை விடுமுறை எதிரொலியாக கறிக்கோழி கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கறிக்கோழி உற்பத்தி

தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, உடுமலை, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. 

இங்கு தினமும் 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படு கிறது. அவை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நுகர்வு ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.

விலை உயர்வு

ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.103 வரை செலவாகிறது. 

கடந்த 5-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) பண்ணை கொள்முதல் விலை ரூ.113 ஆக இருந்தது. 

அதன்பிறகு 7-ந் தேதி ரூ.120, 8-ந் தேதி ரூ.122, 10-ந் தேதி ரூ.127, என்று பண்ணை கொள்முதல் விலை (விற்பனை விலை) அதிகரித்து தற்போது ஒரு கிலோ ரூ.130 ஆக உள்ளது. 

இதனால் கறிக் கோழி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்த னர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. 

இதனால் கோழி இறைச்சி நுகர்வு அதிகரித்து உள்ளது. இதனால் பண்ணை கொள்முதல் விலை மற்றும் கடைகளில் கோழி இறைச்சி விலை அதிகரித்து உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்