தூத்துக்குடியில் நீர் மோர் பந்தல் திறப்பு
தூத்துக்குடியில் நீர் மோர் பந்தலை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில 3-வது மைல் பகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திலகேஷ் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசனி பழம் மற்றும் மோர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.