மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2022-05-15 14:48 GMT

கிணத்துக்கடவு

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

மாநகராட்சி ஊழியர்

கிணத்துக்கடவை அடுத்த சிங்கையன் புதூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது35) இவர் கோவை மாநகராட்சியில் காந்தி பார்க் பகுதியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் வேலை முடிந்து கோவையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சிங்கையன்புதூர் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார்.  அப்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சதீஷ்குமார் மீது மோதியது. 

இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணை

இதைய டுத்து சதீஷ்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த  கிணத்துக்கடவு போலீசார் விசார ணை நடத்தினர். 

இதில் சதீஷ்குமார் மீது மோதியவர், ராஜபா ளையத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பதும், அவர், மெட்டுவாவியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. 

இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்