விஷம் குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் கீழத்தெருவில் வசித்தவர் ராஜாராமன் (வயது 48). கொத்தனார். இவரது மனைவி அல்லி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகள் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருவதால் ராஜாராமன் தனியாக வசித்து வந்தார். மனைவி இறந்து விட்டதால் மனவேதனையில் இருந்து வந்த ராஜாராமன், நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ராஜாராமனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.