ரூ.2 லட்சம், பொருட்கள், சரக்கு வேன் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே ரூ.2 லட்சம், பொருட்கள், சரக்கு வேன் திருட்டு போனது. இது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-05-15 14:06 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் விற்பனை நிறுவனத்தில் ரூ.2 லட்சம், பொருட்கள், சரக்கு வேன் திருட்டுப்போனது. வடநாட்டை சேர்ந்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குடிநீர் விற்பனை நிறுவனம்

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை அம்மனாங்கோயில் ஊராட்சி பகுதியில் குடிநீர் விற்பனை வினியோக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதில் வடநாட்டை சேர்ந்த  மஞ்சித், நிர்மல் என்ற வாலிபர்கள் வேலை செய்தனர். இருவரும், வேலைக்குச் சேர்ந்து 15 நாள் ஆகிறது. 

நேற்று அதிகாலை குடிநீர் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வேன் மற்றும் இதர வாகனங்களில் நிரப்பப்பட்டு இருந்த மொத்தம் 50 லிட்டர் டீசல், ரூ.2 லட்சம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரும்புப்பொருட்கள், ஒரு கியாஸ் சிலிண்டர், எல்.இ.டி. டி.வி, 20 குடிநீர் கேன்கள் ஆகியவற்றை திருடிக்கொண்டு சரக்கு ேவனில் ஏற்றி சென்றனர்.

போலீஸ் வலைவீச்சு 

வேலைக்கு வந்த ஊழியர்கள் குடிநீர் நிறுவனத்தின் சாவி கேட்டுக்குக் கீழே கிடப்பதைப் பார்த்து மேலாளர் கோபிக்கு தகவல் தெரிவித்தனர். அவர், நிறுவனத்துக்கு வந்து பார்த்து விட்டு, உடனடியாக நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டில் ஈடுபட்ட வடநாட்டு வாலிபர்கள் மஞ்சித், நிர்மல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டுப்போன சரக்கு வேன் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்