நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-05-15 12:14 GMT
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்