திருச்செந்தூர் அருகே கவுதம புத்தர் பிறந்தநாள் விழா

திருச்செந்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் கவுதம புத்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-05-15 11:42 GMT
திருச்செந்தூர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் கவுதம புத்தர் பிறந்தநாள் மற்றும் புத்த பூர்ணிமா விழா திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் கிராமத்தில் உள்ள பகவான் கவுதம புத்தர் திடலில் நடந்தது. விழாவிற்கு,
சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் கலந்து கொண்டு புத்தரின் போதனைகளை விளக்கி பேசினார். பின்னர் புத்தரின் போதனைகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கன்னிமுத்து, மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் ரதி அம்மாள், நா.மு.குடியிருப்புவிளை கிளை செயலாளர் ஞானக்குமார், சிறுவர் எழுச்சி மன்றம் ஒன்றிய பொறுப்பாளர் செம்பரிதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்