தேவர்சோலை அருகே மண்டேஸ்வரன் கோவில் திருவிழாவில் பெண்கள் பால்குட ஊர்வலம்
தேவர்சோலை அருகே மண்டேஸ்வரன் கோவில் விழாவில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.;
கூடலூர்
தேவர்சோலை அருகே மண்டேஸ்வரன் கோவில் விழாவில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
மண்டேஸ்வரன் கோவில் விழா
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட டிவிஷன் - நெம்பர் 1 பாடி பகுதியில் உள்ள மண்டேஸ்வரன் கோவில் விழா மற்றும் விநாயகர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி 3 டிவிஷன் ஆற்றங்கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க தேவர்சோலை மெயின் பஜார் வழியாக புனித நீர் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 15-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 7 மணிக்கு மூலவர் விமானம் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 9 மணிக்கு பல்வேறு விசேஷ பூஜைகளுடன் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பால்குட ஊர்வலம்
முன்னதாக மகேஸ்வரன், விநாயகர் சிலையுடன் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.பின்னர் மூலவர் உள்பட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 9 மணி வரை விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.