போலீஸ் உதவி மையம் திறப்பு

போலீஸ் உதவி மையம் திறக்கப்பட்டது.;

Update: 2022-05-14 21:54 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, எலந்தலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு காவல்துறையின் காவல் (போலீஸ்) உதவி மையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு போலீஸ் உதவி மையத்தினை திறந்து வைத்தனர். அடைக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து இந்த போலீஸ் உதவி மையத்தினை தொடர்பு கொண்டு புகாராக தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்