மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக சேர்க்கும் முகாம்

மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக சேர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2022-05-14 21:49 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் என்.எச்.எப்.டி.சி. திட்டத்தின் மூலம் கடன் வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்திட ஏதுவாக அரியலூர் கூட்டுறவுத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக சேர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினராக இல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகே உள்ள கூட்டுறவு சங்கம்-வங்கியில் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்று தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை சமர்ப்பித்து ரூ.100 பங்குத்தொகை மற்றும் ரூ.10 நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து என்.எச்.எப்.டி.சி. திட்டத்தின் மூலம் கடன் பெற்று பயனடையலாம்.
இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்