மயான கொட்டகை அமைக்க வலியுறுத்தல்

மயான கொட்டகை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-05-14 21:43 GMT

மீன்சுருட்டி:

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் பொதுக்குழு கூட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன், மண்டல அமைப்பு செயலாளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் நடேசன், மாநில பொது செயலாளர் ராஜன், மாநில பொருளாளர் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில், மருத்துவர் சமுதாய மக்களுக்கு சுடுகாட்டில் மயான கொட்டகை அமைத்துத்தர வேண்டும். சுடுகாட்டில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். சங்க புதிய உறுப்பினர் அட்டையை அனைவரும் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட அமைப்பு செயலாளர் நாகராஜ் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்