வீடு இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

வீடு இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-14 21:43 GMT
தாமரைக்குளம்:
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, சின்னதுரை எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரியலூர் மாவட்டம் முழுவதும் வீடுகள் இல்லாத மக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் குடியிருக்கும் இடங்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டரை கேட்டுக்கொள்வது. அதேபோல் மாட்டுவண்டி தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக திருமானூர், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளிலும், செந்துறை வெள்ளாற்று பகுதியிலும் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்