சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு எள் ஏலம்
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு எள் ஏலம் போனது.
சிவகிரி
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 941 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் கருப்பு எள் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 95 ரூபாய் 9 காசுக்கும், அதிகபட்ச விலையாக 113 ரூபாய் 10 காசுக்கும், சிவப்பு எள் குறைந்தபட்ச விலையாக 96 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 116 ரூபாய் 99 காசுக்கும், வெள்ளை எள் குறைந்தபட்ச விலையாக 104 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 110 ரூபாய் 99 காசுக்கும் என மொத்தம் ரூ.57 லட்சத்து 97 ஆயிரத்து 318-க்கு ஏலம் போனது.