நடிகை சன்னிலியோன் பிறந்தநாள் கொண்டாட்டம்
மண்டியாவில் நடிகை சன்னி லியோனன் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மண்டியா:
இந்தி திரையுலகின் பிரபல நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு பிறந்தநாள் ஆகும். இதையொட்டி மண்டியா மாவட்டம் கொம்மரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த அவரது ரசிகர்கள், 20 அடி உயர சன்னிலியோன் படம் பொறித்த பேனர் கட்டி கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.
மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அத்துடன் நடிகை சன்னிலியோனின் ரசிகர்கள் ரத்ததானமும் வழங்கினர். ஏற்கனவே மண்டியாவை சேர்ந்த சன்னி லியோனின் தீவிர ரசிகர் ஒருவர், செல்போனில் சன்னிலியோன் படம் மற்றும் வீடியோ வைத்திருந்தால் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி விலையில் கோழி இறைச்சி வழங்கியது நினைவுக்கூரத்தக்கது.