விமான நிலையத்தில் அரைக்கம்பத்தில் தேசிய கொடி

விமான நிலையத்தில் அரைக்கம்பத்தில் தேசிய கொடி

Update: 2022-05-14 20:55 GMT
மதுரை
ஐக்கிய அரபு அமீரகத்தின் 2-வது அதிபரான ஷேக் கலீபா மறைவையொட்டி, இந்தியாவில் நேற்று துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதனையொட்டி, தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவதுடன், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, மதுரை விமான நிலையத்தில் உள்ள 100 அடி உயர கொடி கம்பத்தில் நேற்று, தேசிய கொடி இறக்கப்பட்டு அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

மேலும் செய்திகள்