மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
திருமங்கலம்
மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் இருந்து நெல்லைக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சென்றார். அவர் சென்ற வழியான திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி அய்யனார் கோவில் வளாகத்தில் மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட துணைசெயலாளர் ஓம்.கே.சந்திரன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் தனக்கன்குளம் கருத்தக்கண்ணன், கலை இலக்கியபிரிவு மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர். இளைஞரணி பகுதி செயலாளர் பாலா, மாவட்ட பிரதிநிதி மாயி, பகுதி துணை செயலாளர்கள் பால்பாண்டி, செல்வகுமார், வட்ட செயலாளர்கள் பொன்முருகன் ஹார்விப்பட்டி மகாராஜன், எம்.ஆர்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
ேமலும் திருமங்கலம் தொகுதி கப்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேலும் புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றனர்.