தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்
ஓமலூர் பகுதியில், அனுமதியின்றி வைக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டது.
ஓமலூர்:
ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி, தாச சமுத்திரம், பூசாரிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு அனுமதியின்றி தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக்கம்பங்கள் நடப்பட்டன. இந்த நிலையில் அனுமதியின்றி நடப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற கோரிக்கை எழுந்தது. அதன்பேரில் அனுமதியின்றி நடப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற வருவாய் துறையினர் மற்றும் மற்றும் சுங்கச்சாவடி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
இதையடுத்து காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ், ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், வருவாய் ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் போலீசார், தீவட்டிப்பட்டி, தாச சமுத்திரம், பூசாரிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். அங்கு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. மேலும் இதே போல் குப்பூர், காமலாபுரம் பிரிவு ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. கொடிக்கம்பங்களை அகற்றும் போது தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
---