வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

வாய்க்கால்கள் தூர்வாரும் பணி;

Update: 2022-05-14 20:08 GMT
கரம்பயம்:
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெண்டாக்கோட்டை ஊராட்சியில் சிஎம்பி 8, 9 ஆகிய  வாய்க்கால்களை தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வெண்டாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி புருசோத்தமன் கூறுகையில், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெண்டாக்கோட்டை ஊராட்சியில் உள்ள சிஎம்பி 8, 9 என்ற எண்கள் கொண்ட வாய்க்கால்கள் மூலம் தான் பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. கடைமடை வரை அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிஎம்பி வாய்க்கால் தூர்வாரப்படுவதால் வெண்டாக்கோட்டை ஊராட்சியில் 120 எக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெற தயாராக உள்ளது என்றார். 

மேலும் செய்திகள்