நுங்கு விற்பனை மும்முரம்

நுங்கு விற்பனை மும்முரம்

Update: 2022-05-14 20:03 GMT
பேராவூரணி:
பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆதனூர், கூப்புளிக்காடு, சங்கமங்கலம், தென்னங்குடி, ஆத்தாளூர், கழனிவாசல் ஆகிய பகுதியிலும், குளக்கரைகளிலும், வயல்வெளி ஓரங்களிலும் அதிகமான பனைமரங்கள் உள்ளன. பேராவூரணி பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக பொதுமக்கள் குளிர்பானங்கள், நுங்கு, தர்பூசணி, இளநீர்் உள்ளிட்டவைகளை வாங்கி பருகி வருகின்றனர். இந்தநிலையில் பேராவூரணி பகுதியில் நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நுங்கு உடலுக்கு குளிர்ச்சி என்பதால் ஏராளமான பொதுமக்கள் நுங்கை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர். இதுகுறித்து நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து நுங்கை வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறோம். ரூ.50-க்கு 20 நுங்கும், தண்ணீர் நுங்கு ஒன்று ரூ.10-க்கும் விற்பனை செய்து வருகிறோம். தமிழக அரசு எங்களுக்கு காப்பீடு வசதி செய்து தர வேண்டும்.  பனைமரம் ஏறும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்