குளத்தில் முதலை உள்ளதாக கிராம மக்கள் அச்சம்

மணல்மேடு அருகே குளத்தில் முதலை உள்ளதாக கிராம மக்கள் அச்சத்தில் அடைந்துள்ளனர். இந்த முதலையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Update: 2022-05-14 19:40 GMT
மணல்மேடு:
மணல்மேடு அருகே குளத்தில் முதலை உள்ளதாக கிராம மக்கள் அச்சத்தில் அடைந்துள்ளனர்.. இந்த முதலையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குளத்தில் முதலை
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த வரதம்பட்டு கிராமத்தில் ஓமக்குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக முதலை ஒன்று உள்ளதாகவும், இந்த முதலை அடிக்கடி குளக்கரையில் படுத்து கொள்வதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள், வருவாய்த்துறை மற்றும் சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் உத்தரவுப்படி வனவர் கதாநாயகன் தலைமையில் வனத்துறையினர் ஓமக்குளத்திற்கு சென்று முதலை பிடிக்க  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  
கோழி இறைச்சி
மூன்று இடங்களில் பள்ளம் தோண்டி அதில் கோழி இறைச்சியை வைத்தும், கரைகளில் கோழி இறைச்சிகளை வைத்தும் முதலையை பிடிக்க பொறி வைத்துளள்னர். ராஜன் வாய்க்கால் வழியாக முதலை குளத்திற்குள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் குளத்தில் இறங்கி குளிப்பதற்கும், கால்நடைகளை குளிக்க வைக்கவும் வருவாய்த்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் செய்திகள்