மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி

ஆச்சாள்புரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி நடைபெற்றது.;

Update: 2022-05-14 19:01 GMT
கொள்ளிடம், மே.15-
கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இயற்கை வேளாண் பண்ணை தொகுப்பு மற்றும் விதை உளுந்து உற்பத்தியாளர் மகளிர் குழுவிற்கான பயிற்சி நடைபெற்றது. இதில் விதை சான்று உதவி இயக்குனர் சுதா, வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் மனுநீதிசோழன், மாநில வள பயிற்றுனர் பாலசுப்பிரமணியன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டு இயற்கை விவசாயத்தில் பெண்கள் ஈடுபட ஆலோசனை வழங்கினர். இதில், வேளாண் பண்ணை தொகுப்பு உறுப்பினர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்

மேலும் செய்திகள்