டீ மாஸ்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
கொடுத்த கடனை திருப்பி தராததால் டீ மாஸ்டரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
டீ மாஸ்டர்
கரூர் அருகே உள்ள புலியூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 60). டீ மாஸ்டராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காந்தா என்பவரிடம் ரூ.70 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால் அதனை அவர் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அந்த பணத்தை காந்தாவின் பேரன் நிதிஷ்குமார் (23) சேட்டுவின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
வாலிபர் கைது
இதில், ஆத்திரம் அடைந்த நிதிஷ்குமார் தான் வைத்திருந்த கத்தியால் சேட்டுவின் நெஞ்சில் குத்தினார். இதில், படுகாயம் அடைந்த சேட்டுவை அவரது குடும்பத்தினர் மீட்டு காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து சேட்டுவின் மருமகள் மதினா அளித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து நிதிஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.