ரேஷன் கார்டு தொடர்பான மக்கள் குறைதீர் முகாம்
கிளியனூரில் ரேஷன் கார்டு தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் நடந்தது.;
குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ரேஷன் கார்டு தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் திருத்தம், புதிய மின்னணு ரேஷன் கார்டு, அங்கீகார சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக நடந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
இதில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது, ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன், தனி வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரேசன் அட்டையில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.