அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்வோர் மீது கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை

அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-05-14 18:35 GMT
கரூர், 
சாதாரண கற்கள், மண், கிராவல், களிமண், சரளைமண், மணல், கிரானைட், சுண்ணாம்புக்கல் மற்றும் குவாட்ஸ் - பெல்ஸ்பர் போன்ற கனிமங்களை அரசு அனுமதியின்றி வெட்டி எடுப்பது, அனுமதியின்றி வாகனங்களில் எடுத்து செல்வது மற்றும் ஒரே நடைச்சீட்டை பலமுறை பயன்படுத்துவது, குத்தகை உரிமம் முடிவுற்ற பின்னரும் தொடர்ந்து குவாரி செயல்படுவது ஆகியவை இந்திய தண்டனை சட்டம், கனிமம் மற்றும் சுரங்கம் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள்படி குற்றம் ஆகும். எனவே, அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்து செல்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுத்திடவும், அனுமதியின்றி கனிமங்கள் எடுத்து செல்லும் போது, கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கனரக எந்திரம், வாகனங்கள், கருவிகள் ஆகியவை குறித்தும் மற்றும் இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் உடந்தையாக உள்ள நபர்கள் மீது கைப்பற்றுகை அலுவலரால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நீதிமன்றத்தின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்