சத்தியகிரீஸ்வரருக்கு தீர்த்தவாரி
சத்தியகிரீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
திருமயம்:
திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று இரவு சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு நேற்று புஷ்கரணியில் வேணுவனேஷ்வரி சமேத சத்தியகிரீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு வேணுவனேஷ்வரி சமேத சத்தியகிரீஸ்வரர் திருமஞ்சனம் நடை பெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் பல்லக்கில் வைத்து மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருக்கொடி இறக்கப்பட்டது.