சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே முதலூரில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் சிறப்பு முகாம் நடைபெற்றது. சாத்தான்குளம் வேளாண்மை அலுவலர் சுஜாதா தலைமை தாங்கினார். தரிசு நில தொகுப்பு விவசாயிகளுக்கு பயிர்க்கடன், கிசான் கடன் அட்டை வழங்குதல், குளத்து வண்டல் மண், பட்டா மாறுதல் செய்தல், பயிர்க் காப்பீடு மற்றும் விவசாய துறையின் திட்டங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார். கால்நடை உதவி மருத்துவர் வினோத்குமார், வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் கீர்த்தனா, கிராம நிர்வாக அலுவலர் பாலகுமார் ஆகியோர் பேசினர். விவசாயிகளிடமிருந்து பட்டா மாறுதல் மற்றும் கிசான் கடன் அட்டை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் முனீஸ்வரி செய்திருந்தார்