இளையான்குடி,
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தமிழ் துறை முதுகலை மாணவர் மன்ற விழா மற்றும் தளிர் மாணவர் காலாண்டிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அப்துல் அஹது தலைமை தாங்கி னார். முதுகலை முதலாம் ஆண்டு தமிழ் படிக்கும் கருணை செல்வி வரவேற்று பேசினார். உதவி பேராசிரியர் சேக் அப்துல்லா தமிழ் மன்ற உரை நிகழ்த்தினார்.கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி மற்றும் தமிழ்துறை தலைவர் இப்ராகிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவிப்பேராசிரியர் அப்துல்ரஹீம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கலந்து கொண்டு தளிர் மாணவர் காலாண்டிதழ் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முதுகலை 2-ம் ஆண்டு மாணவி நாகநந்தினி நன்றி கூறினார். சமூக ஆர்வலர் முதுகை ஹிதாயத்துல்லா, கவிஞர் ஹிதாயத் துல்லா, உறுப்பினர்கள் அபூபக்கர் சித்திக் ஹமீது தாவூத் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்வினை தமிழ் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.