புலி தாக்கி மூதாட்டி பலி
சந்திராப்பூரில் புலி தாக்கி மூதாட்டி உயிரிழந்தார்.
மும்பை,
சந்திராப்பூர் மாவட்டம் தடோபா அந்தாரி புலிகள் சரணாலயத்தின் அருகே சீதாரம்பேத் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி ஜெய்பாய் (வயது65). இவர் சம்பவத்தன்ற காட்டில் தெண்டு இலைகளை சேகரிக்க சென்றிருந்தார். மாலை வரை வீடு திரும்பாததால் அவரை தேடி குடும்பத்தினர் அங்கு சென்றனர். அங்கு ஜெய்பாய் புலி தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும், புலி நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாவும், அப்பகுதியில் வசிக்கும் கிராமமக்கள் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரி ஜித்தேந்திரா ராம்கோன்கர் தெரிவித்தார்.