ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து கடை அடைப்பு போராட்டம்
அச்சடிக்கும் காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து காரைக்குடியில் மாவட்ட பேப்பர் மற்றும் பிரிண்டர்ஸ் அசோசிேயசன் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
அச்சடிக்கும் காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து காரைக்குடியில் மாவட்ட பேப்பர் மற்றும் பிரிண்டர்ஸ் அசோசிேயசன் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டம்
அச்சடிக்கும் காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வை தடுக்க வேண்டியும், காகிதத்திற்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மாற்றப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். 1980-ம் ஆண்டு நிர்ணயித்த அரசு அச்சு கூலியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அச்சக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை மாவட்ட பேப்பர் மற்றும் பிரிண்டர்ஸ் அசோசியேசன் சார்பில் காரைக்குடி நகர் முழுவதும் நேற்று ஒரு நாள் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி காரைக்குடி பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பேப்பர் மற்றும் பிரிண்டர்ஸ் அசோசியேசன் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட பேப்பர் பிரிண்டர் அசோசி யேசன் செயலாளர் ரமேஷ் கூறியதாவது:- கொரோனா காலக்கட்டத்தின்போது தமிழகம் முழுவதும் உள்ள பிரிண் டர்ஸ் அசோசியேசன் பணிகள் முற்றிலும் பாதிக்கப் பட்டது.
ஜி.எஸ்.டி. வரி உயர்வு
அதில் இருந்து மீண்டு வருவதவற்கே தற்போது ஓராண்டு காலத்திற்கும்மேல் ஆனது. இந்தநிலையில் தற்போது மத்திய அரசு பேப்பர் காகிதத்திற்கு விலையை ஏற்றி வருவதால் இந்த தொழிலை நம்பிஇருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர காகிதத்திற்கு விதிக்கப் பட்ட ஜி.எஸ்.டி. வரியை தற்போது மத்திய அரசு 18 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதால் அனைத்து வகையான பேப் பர்களின் விலையும் கூடும் நிலை உள்ளது.
மேலும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டு, புத்தகம் உள்ளிட்ட விலையும் இதன் மூலம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் சார்பில் இதன் விலையை குறைக்க வேண்டும். மேலும் மத்திய அரசு இதற்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியையும் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.