கஞ்சா விற்ற சிறுவன் கைது
சேலத்தில் கஞ்சா விற்ற சிறுவன் கைது செய்யப்பட்டான்.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் போலீசார் நேற்று மரவனேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த 18 வயதுடைய சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.