ரியல் எஸ்டேட் தரகர் முகத்தில் கொதிக்கும் தேனீர் வீச்சு
ஆற்காடு அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் கொதிக்கும் தேனீரை ரியல் எஸ்டேட் தரகர் மீது ஊற்றிய மற்றொரு தரகர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆற்காடு
ஆற்காடு அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் கொதிக்கும் தேனீரை ரியல் எஸ்டேட் தரகர் மீது ஊற்றிய மற்றொரு தரகர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாணாபாடி தோப்பு தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 32) ரியல் எஸ்டேட் தரகராக உள்ளார். இவருக்கும் நந்தியாலத்தை அடுத்த பூஞ்சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் கார்த்திகேயனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு கார்த்திகேயன் வீட்டிற்கு தினேஷ் சென்றுள்ளார். அப்போது வெளியே நின்றபடி தனக்கு சேர வேண்டிய பணத்தை தருமாறு கார்த்திகேயனிடம் அவர் கேட்டுள்ளார்.
வெளியே வந்த கார்த்திகேயன் பணம் கொடுக்க முடியாது எனக் கூறி தினேசை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் கையில் வைத்திருந்த சூடான கொதிக்கும் தேனீரை தினேஷின் முகத்தின் மீது ஊற்றி விட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
காயம் அடைந்த தினேஷ், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.